24 மணி நேரம் போதவில்லை என புலம்ப வேண்டாம் பூமியில் ஒருநாள் 25 மணி நேரமாக அதிகரிக்க போகிறதாம்

வாஷிங்டன்:
வருங்காலங்களில், நாள் ஒன்றிற்கான நேரம், 24 மணி நேரத்தில் இருந்து 25 மணி நேரமாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் இதுபற்றி சில சுவாரசிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. ஆனால் வருடத்திற்கு 3.82 செ.மீ தூரத்திற்கு நிலவு விலகி சென்றபடியே உள்ளது.

விலகும் நிலவு

தற்போது அது முதலில் இருந்ததைவிட 44 ஆயிரம் கி.மீ தூரம் பூமியை விட்டு விலகி சென்று உள்ளது. எனவே இப்போது ஒரு நாள் நேரம் என்பது 24 மணி நேரமாக உள்ளது. இதுவே, 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரம் 41 நிமிடங்களாக மட்டுமே இருந்தது.

25 மணி நேரங்கள்

நிலவு நகரும் அளவை கணக்கில் கொண்டு பார்த்தால், அடுத்த 200 மில்லியன் ஆண்டுகளில், பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரங்களாக இருக்கும். அப்போது மக்களின் கால நேரம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வீரக்குமாரன்

tamil.oneindia authors/veerakumaran.

எழுதியவர் : (8-Jun-18, 4:42 am)
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே