வா என் தேவதையே

அழகுக்கு பேர் போன
ரோஜாக்களே
சற்று விலகி நில்லுங்கள்...
25 இல் அடியெடுத்து வைக்க...
அழகு தேவதை வருகிறாள்...
சோகத்தால் உதிர்ந்து விடாதீர்கள்..
நாளை அவள் கூந்தலில் உங்களுக்கும் இடம் உண்டு...
கோடி பூக்களை தேக்கி வைத்தாலும் கூட
உன் புன்னகைக்கு ஈடு சொல்ல முடியுமா??
தோழியே உன்
செவ்விதழ் மலர்ந்து..
புன்னகை பூக்களை என்றுமே
உதிர்த்து கொண்டே இருக்க வாழ்த்துகிறேன் .........
பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் உயிர்(மெய்)யே....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (13-Jun-18, 3:54 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
Tanglish : vaa en thevathaiye
பார்வை : 261

மேலே