வேலை முக்கியம்

நீ எங்கே வேலை செய்கிறாய், உன் பதவி என்ன, உன் சம்பளம் என்ன என்பதைப் பொருத்துதான், இந்தச் சமூகம் உன்னை மதிக்கும். இதுவே உலக வழக்கம். எங்கே சென்றாலும் உன் படிப்பும் வேலையும் உனககுப் பெருமை தேடித்தரும். எந்த ஒரு மனிதனுக்கும் இந்த மரியாதை தேவையாயிருக்கிறது. உதாரணத்திற்கு புதிய நண்பர் ஒருவர் கிட்டும்போது, அவரிடம் *நான் சும்மாதான் இருக்கிறேன், வேலையெல்லாம் இல்லை* என்று சொல்லிப் பாருங்கள். பிறகு உங்களை அவர் எப்படிப் பார்க்கிறார் என்று தெரியும். ஆக படிப்பு, வேலை, தொழில், அந்தஸ்து, பொருளாதாரம் இவையே ஒரு மனிதனை நல்ல விதமாக நடத்த இச்சமூகம் விரும்புகிறது. சமூகத்தைத் தள்ளி வைத்தா வாழமுடியும். வேலைப் பளு அதிகமாகும் போது சலிப்புத் தட்டும், விட்டு விடலாம் என்று தோன்றும், எனவே இருக்கின்ற எதையும் வேண்டாம் என்று சட்டென ஒதுக்கவும், நிலுவையில் வைக்கவும் முடியாது, அதுதானே நமக்குச் சோறு போடுகிறது.
பார்க்கும் வேலை முக்கியம்::
==========================
அலுவலகம் இல்லையேல் ஆருமுன்னைச் சீண்டார்
வலுவாக நானிலமும் வையும்.! - அலுவல்
அலுத்துச் சலித்தால் அதனை உடனே
நிலுவையில் வைக்காமல் நீக்கு.!