வழியும் வலியும்
பேசிப் பழகுவது வழி; பேசாமால் புறக்கணிப்பது வலி...
முகம் பார்ப்பது வழி; முகம் கொடுக்க மறுப்பது வலி...
உள்ளம் மகிழ்விப்பது வழி; உள்ளம் உடைப்பது வலி...
காயம் கட்டுவது வழி; காயத்தை ஆழமாக்குவது வலி...
கண்ணீர் துடைப்பது வழி; கண்ணீருக்கு காரணமாவது வலி...
துரோகத்தை மறப்பது வழி; துரோகம் தொடர்வது வலி...
அன்பு கிடைப்பது வழி; அன்புக்கு ஏங்குவது வலி...
ஆதரவாக இருப்பது வலி; ஆதரவு இல்லாதிருப்பது வலி...