நட்பிற்கு பிரிவு உண்டோ
ஏன் என்று தெரியவில்லை...!!!
எப்பொழுதும் இனிமையாக போகும் என் பயணம்
இப்பொழுது சோகத்தை தருகிறதே...
மலர்களை போன்று பூத்து குலுங்கும்
மாணவர்கள் என்னும் அடையாளத்தில்
மறக்க முடியாத நினைவுகளை தந்து
மனதை வாட்டுவது ஏனோ???
நட்பென்னும் பெயரில்
நாட்கள் நன்றாக கடக்க,
காதலை கூட மிஞ்சிய நட்பின் பெருமை
என்றும் நிலையானது...
நினைவினில் இனிமையே தருவது...
நேர காலங்கள் நம்மை பிரித்தாளும்
நெஞ்சில் இருக்கும் நினைவுகள்,
நம்மை பிரிய விடுவதில்லை...
கடலுக்கும் கரை உண்டு
நம் நட்புக்கும் நினைத்தால்
சந்திக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு...
நம்பிக்கையுடன்,
நம் நட்பின் நினைவுகளுடன் நான்...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
