காதல் சிறையில் கைதி ஆனேன்

விழி அம்புகளால்
காதல் கணை தொடுத்து,
உள்ளமதை தைத்து விட்டாய்...!!!
நானும் திரையிட்டு மறைத்து வைத்தேன்...!!
என் இதயத்தை...!!
இதழோரம் புன்னகையால்
சிறை பிடித்து விட்டாய்...!!
உன் விரல் நுனி என் கன்னத்தை
ஸ்பரிசித்த மறு கனம்
நான் மொத்தமாக விழுந்தேன்..
உன் இதய சிறையில் ...!!!
இனி......
உன் இதயச் சிறை........
அது எனக்கு மட்டுமே சொந்தமான
சொர்க்க அறை....
ஆம் நானும் காதல் கைதி ஆனேன்...

எழுதியவர் : லீலா லோகிசௌமி (21-Jun-18, 9:56 am)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 297

மேலே