புன்னகை மருத்துவம்

நயனங்கள் பாடும் ராகங்களில்
----நதியலைகள் சிலிர்க்குதடி
கயல்கள் மூச்சடக்கி துள்ளி வந்து
----உன் கண்ணழகை ரசிக்குதடி
முயற்சியின்றி முடங்கிக் கிடக்கும் இளைஞனும்
----உன் புன்முறுவலில் விழித்து எழுந்து வேலை தேடுவானடி
தயக்கங்களை தகர்த்தெறிய வந்த தன்னிகரில்லா
----ஆல் விட்டமின் வெள்ளையுடை மருத்துவச்சியே !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jun-18, 9:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 110

மேலே