உவகை புரிவேன் என் தோழியே
நான் உவகை புரிந்தேனே என் தோழியே
ஏன் என்று தான் தெரியவில்லை ?
ஏனோ என் கனவு நிறைவேறியதோ
அதனால் தானோ இதனால் தானோ
எதனாலோ ?
புரியவில்லை
ஆனால் உன்னிடம் மட்டுமே சொல்ல துடிக்கிறேன் என் தோழி
அது நா எழுந்தாலும் முடியவில்லை நெஞ்சம் பதைக்கிறது
கண்கள் சுழல்கின்றது
என் என்று தான் தெரியவில்லை
இது தான் உவகை என்று கொள்வேனோ
வெற்றி புரிந்தேன் என் தோழி வெற்றி புரிந்தேன்
நீ கொடுத்த உரம் நான் செழித்து வளர்ந்து
வெற்றியெனும் கோப்பையை கொண்டு நிற்கிறேன்
நீ சென்று வா என்றாய்
நான் வென்று வந்தேன்
எல்லாம் உனக்காக என் தோழியே
நீ இமயம் தாண்டு என்றாலே
நான் வானையும் தாண்டிடுவேன்
உன் துணை இருந்தால் விண்ணும் மண்ணும்
துச்சம் என்று என்னிடுவேன்
என் வெற்றி உன் வெற்றியே
நீ உவகை புரிய நான் மகிழ்ந்து ஆனந்த கூத்தாடிடுவேன்
என்றுமே நீ என்னோடு இருந்தால் என்றும் உவகை புரிந்திடுவேன் என் தோழியே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
