வாழும் பிணம்

தினமொரு மோகம்
நொடியொரு ஆசை
திசைமாறும் உறவுகள்
தடம் மாறும் கனவுகள்....

பெற்றொரு பெயர்
வைத்தாள்
புழுதியில் தான் அவள்
புரண்டால்.....

ஆதியும் அவளே
அந்தமும் அவளே
வீதியில் வீசாமல்
விதியால் சபித்தவள்...

அவள் ரத்தப் பை
சுவைத்தவன்....
அதை தின்றே
கொழுத்தவன்....

அவளுக்காக வாழ
அளவற்ற ஆசை
நிலையற்ற வாழ்க்கையில்
மலிந்ததென் மீசை....

பிடிப்பில்லா வாழ்க்கை
பிழைக்க தெரியா மனம்
பிடிவாத குணங்கள்
வெறி கொள்ளும் அன்பு....

விடியல் எங்கே
ஏங்குகிறேன்....
அவள் மடி தேடி
ஓடுகிறேன்....

வந்த இடம்
கிடைக்கவில்லை
போகும் இடம்
தெரியவில்லை....

இருக்குமிடம் இது
வேண்டாம்
மீண்டும் என்னை
சுமந்திடு....

மிருகமான
பிள்ளையிடம்
மீள வழி
சொல்லிடு.....

ரா.உமாசங்கர்......

எழுதியவர் : (28-Jun-18, 6:08 pm)
சேர்த்தது : உமா சங்கர் ரா
Tanglish : vaazhum pinam
பார்வை : 107

மேலே