ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


விதை நெல்லையும்
விற்று வாடுகிறான்
உழவன் !

ஆற்றுப்படுத்தும்
அலைபாயும் மனதை
தியானம் !

நெகிழி ஒழிப்பால்
வந்தது வாழ்வு
வாழையிலைக்கு !

உறுதி செய்யங்கள்
பெண்கள் பாதுகாப்பை
நீங்கட்டும் கறை !

பணம் கூடக் கூட
குறைகின்றது
குணம் !

கவனம்
சுயமியால்
நடக்குது விபத்து !

பயணநேரம் குறைத்து
அறிவியல் சாதனை
விமானம் !

கூடுதல் கல்வி
தடையாகிறது ஆண்களுக்கு
வேலை கிடைக்க !

கூடுதல் கல்வி
தடையாகிறது பெண்களுக்கு
வரன் கிடைக்க !

ஆள்வோரிடம்
அறம் இல்லாததால்
தொடரும் போராட்டம் !

வேண்டாம் எட்டு வழி
போதும் நான்கு வழி
மக்கள் !

மக்களை வருந்துவது மடமை
உணரவேண்டியது
ஆள்வோர் கடமை !

இருக்க வேண்டும்
இலாப நோக்கின்றி
திட்டங்கள் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (29-Jun-18, 8:58 am)
பார்வை : 182

மேலே