உண்மை கசப்பதில்லை

உண்மைகள் கசப்பதில்லை...

உண்மை பொய்யினால் கசப்பதில்லை...

தோல்வியால் உண்டான படிக்கட்டுகள் சறுக்குவதில்லை..

போலி வார்த்தைகளின் ஆயுள் குறைவு...

விடா முயற்சிக்கு வீரியம் அதிகம்...

நேர்மை ஒருபோதும் மறக்கப்படுவதில்லை...

உயர்வின் மேட்டிமைகள் வீழவே செய்யும்...

வெளிக்காட்டா அன்பு வெடித்துச் சிதறும்...

அவமானப் பாதைகள் அழகாக மாறும்...

அலட்சியப் பார்வைகள் வெட்கமடையும்...

ஆணவம் அழிவை தானாக தேடும்...

பிறழும் நாவுகள் ஒருநாள் புகழ்பாட அலைமோதும்....

எழுதியவர் : ஜான் (2-Jul-18, 5:32 am)
பார்வை : 619

மேலே