நிஐங்களும் நிழலும்

நிஐங்களை மறந்து நிழலுக்குள் மனங்கள்
நிலை தடுமாறி நிற்கிறது
பாேலிகளுக்கு முன்னால் உண்மைகள்
ஊமைகளாய் மரணிக்கிறது
ஏமாற்றம் என்றும் துராேகத்தை தூண்டுகிறது
பேராசை மனங்களை பேரம் பேசுகிறது
பணம் பதவிகளை விலை பேசுகிறது
ஏழை வீட்டின் ஏட்டுக் கல்வியில் கத்தி நீழ்கிறது
பசித்து வாடும் மானிடம் மண்ணுக்குள் சமாதியாகிறது
விவசாயின் கண்ணீரில் பயிர் கூட துளிர்க்கிறது
ஓலை வீட்டு நிலாச் சாேறு தித்திப்பாய் இனிக்கிறது
மாடி வீட்டுப் பிரியாணி குப்பையாேடு புதைகிறது
பால்குடி குழந்தை விரல் உமிழ்ந்து தூங்குகிறது
மதுபானச் சாலைகளில் வரிசை நீள்கிறது
இருபது வயது விதவைப் பெண்
முதியவருக்கு மனைவியாகிறாள்
பதினாறு வயதுப் பள்ளிப் பெண்
மணமாகாது கர்ப்பிணியாகிறாள்
முதியோர் இல்லங்கள் பெற்றவர் சரணாலயம்
ஆச்சிரம ஆயாவுக்கு ஆயிரம் குழந்தைகள்
பதவிப் பாேட்டி சுயநலத்தில்
அதிகாரங்கள் பறிபாேகிறது
பணமும், காமும் மாமிசத்தில் காத்திருக்கிறது
பார்வையற்றவன் இருளுக்குள் ஔிருமா கனவுகள்
ஊமையின் உதட்டுக்குள்ளும் உண்மைகள் மறையுமா
எங்கே பாேகிறாேம் மனிதப் பிறவிகள் நாம்.....

எழுதியவர் : அபி றாெஸ்னி (2-Jul-18, 9:34 am)
பார்வை : 356

மேலே