அழகு

சோலையின் அழகு மலரோவியம்
காலையின் அழகு சூர்யோதயம்
கடலின் அழகு அலையாடல்
கலையின் அழகு சுவைதேடல்
காந்தியின் அழகு பொக்கைவாய்ச் சிரிப்பு
கவிதைகளின் அழகு காட்சிகளின் விரிப்பு
அருவியின் அழகு ஆர்ப்பரித்தல்
ஆற்றலின் அழகு பயன் படுத்தல்
வானத்தின் அழகு மேகங்கள்
கானத்தின் அழகு ராகங்கள்
தவத்தின் அழகு உண்மை
தமிழின் அழகு தொன்மை .

எழுதியவர் : அமுதன் (15-Aug-11, 8:09 pm)
பார்வை : 437

மேலே