மறந்தான் மனிதன்

இறைவன் மிக பெரிய சிற்பி..........

புண்ணிய தூண்களாய் மரங்கள்,
வின் தொடும் ஏணியை மலைகள்,
சொர்க்கத்தின் வாசற்படிகளாய் மேகங்கள்,
புனிதத்தின் வடிவாய் மழைத்துளிகள்,
என்றும் இளமை மாற நதிகள்,
என எல்லாம் செதுக்கினான்..........
மண்ணில் சுவர்க்கம் படைத்தான்
இயற்கையால்..........!
இறுதியாய்
ஆறாம் அறிவை தந்து
மனிதனை வடித்தான்.........
இறைவன் அழகாய் படைத்த
இயற்கையை.........
மனிதன் அறிவால் அழித்தான்.........

அழிவது இயற்கை மட்டும் அல்ல,
அடுத்த தலைமுறை என்பதை
மறந்தான் மனிதன் !

எழுதியவர் : சோட்டு வேதா (4-Jul-18, 4:06 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
பார்வை : 133

மேலே