முயலின் ஓர்நொடி

ஒளிர்வில்லாத இருள்சூழ்ந்த
அடவிகளுக்கிடையே
அடைபட்டது போலே
மனமுணர்ந்து பறக்கும்
முயலின் ஓர் நொடி,

காற்று என்னாசி
சேரயியலாளவு
பாறைகளின்
அடிபாதாளத்தில்
வீழ்ந்து நொடிகிறேன்,

இலைதழைகள் ஏதும்
ஆடவும் அசையவு மில்லை,
வெப்பச்சலனமோ என்னை
சடலமாக்க முயல்கிறது,
இருந்தும் என்மூச்சு
விட்டுவிட்டு துடிக்கிறது,
வயிறு உப்பி வெடிக்க
ஏங்குகிறது,
 
நீரோடுமொலிச் சத்தம் கேட்டு
காற்று சுமந்து திரியும்
அசுத்த கூவநெடியை உணரமுடிந்து
சுவாசிக்க முயல
நாசியை அடையாமல்
அலைக்கழிக்கிறது காற்று,

புகை கக்கிக் கொண்டோடும்
வாகன ஒலியைச் செவியுணர,
அள்ளியெறிகிறது அன்றாட
உணவுக் கஞ்சல்களை,
பசித் தீருமோவென
வரிவிழுந்து வயினேங்க,
அள்ளிக் கொண்டோடுகிறது
விஷக்காற்றும் ஓநாயும்,

எவரேனும் காற்றைச் சுவாசித்தால் ஓநாயைக் கண்டால் சிறிது உணவு
கொடுக்கவும்,
உருவற்ற காற்றிடமும் ஓநாயிடமும் எனது உயிருள்ளது?

எழுதியவர் : தமிழினியன் (5-Jul-18, 8:43 pm)
பார்வை : 1898

மேலே