நீ வருவாயா

காலையில் கதிரவனாய் வந்து துயிலெழுப்புகிறாய்
கண்ணாடி பார்க்கையிலும் நீதான் தெரிகிறாய்
மூச்சினிலும் உன் சுவாசத்தைத்தான் முகரவைக்கிறாய்
நான் சூடும் பூக்களிலும் புன்னகைத்து நிற்கிறாய்
வீட்டினுள் இருக்கும் போதும் காற்றாய் வந்து கதவை தட்டுகிறாய்
வெளியில் வந்து சிந்திக்கையிலும் வானமெங்கும் உன் உருவமாய் உருவாகுகிறாய்
இரவிலும் வெண்ணிலவாய் வெளிச்சம் தருகிறாய்
அம்மாவாசை நாளிலும் அமைதியின்றி ஒவ்வொரு நொடியும் உன்னை தேட வைக்கிறாய்
படுக்கையறையிலும் தலையணையாய் வந்து தாங்குகிறாய்
உறங்கும் பொழுதும் கனவில் வந்து காட்சியளிக்கிறாய்
உன் நினைவால் நான் உயிர்ரோடு இருக்கிறேனா என கூட தெரியவில்லை
ஒரு முறை என்னை கிள்ளி உணர வைப்பாயா
இதயமும் இடைவிடாது உன் பெயரை உச்சரித்துக்கொண்டேயிருக்கிறது
எனக்குள் நீ வந்ததால் நான் தொலைந்துபோனேன்
வாயிற்படியில் நின்று என் மனது திசையெங்கும் உன்னை தேடியலைகிறது
எப்போது வருவாய் என்னை உயிர்ப்பிக்க
காதலனே உன் கரம் தீண்டவே காத்திருக்கிறேன்
மன்னவனே நீ மாலையிடும் நாளை ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறேன்
மலர்மாலையுடன் நீ வரும் நாள் எந்நாளோ அந்நாள்வரை
கனவுகளில் கலவரத்துடன் உன் நினைவால் உருகும் உயிருடன்
நித்தமும் காதலனையே எண்ணி கரைந்துகொண்டிருக்கும் அன்பு காதலி !!!

எழுதியவர் : M Chermalatha (8-Jul-18, 11:11 am)
Tanglish : nee varuvaayaa
பார்வை : 171

மேலே