முக நூல் நண்பன்
எனக்கு நீல கட்டை விரலை உயர்த்தும் நண்பனை விட
இதயம் கொடுக்கும் உயிர் நண்பன் மீது சற்று பிரியம் அதிகம் தான்
இடுகைகள் தேடி நீ இதயங்கள் இடுகையில் புன்னகை பூக்கிறது உயிரின் உள்ளே
முகம் காணாமல் முகவரி தெரியாமல் எனக்காய்
இத்தனை அன்பினை கொடுக்கும் நீ பூங்காற்றின் சாயல் நண்பா
என்றாவது உன்னை காணலாம் அன்று என் இதழ் மௌனம் கொண்டு
கண்ணீர் வார்த்தைகள் ஆகலாம் அத்தனை அன்பு கொண்டவன் நான் நண்பர்கள் மீது
உன்னை காணும் வரை உன் நட்பு துளிகள் மட்டும்
என்னுடன் இருக்கட்டும் உன் நினைவுகளில் ஒன்றாக உயிர் உள்ளவரை