அந்த நேரம்
வானத்தின் வெளிச்சம்
ஓய்ந்திருக்க
நீயோ என் மடி
சாய்ந்திருக்க
அந்த நேரம்
காற்றும் கதகதக்க
நானும் உன்மேல்
விழுந்து கிடக்க
அந்த நேரம்
மௌனம் இசையமைக்க
இமையும் அசையாதிருக்க
அந்த நேரம்
நான் தொலையாமல்
தொலைய
நீ கிடைக்காமல்
கிடைக்க
அந்த நேரம்
அண்டமே வெறிச்சோட
அமைதி கடல் அலை
கரை மோதிக்கொண்டிருக்க
அந்த நேரம்
இங்கே இருப்பது
நீயும் நானும்
இதயம் இணைய
நாமாய் ஆனோம்
அந்த நேரம்
உன் விரல்
தேடுவது என்ன
என் விரல்
தேடுவது என்ன
அகப்பட்டது உன்
கைகள் எனக்கு
என் கைகள் உனக்கு
அந்த நேரம்
உன் மூச்சிக் காற்று
பட்டு பட்டு நான்
பாதியாகி போனேன்
என் ரெட்டை விழி
தொட்டு தொட்டு நீ
சொட்டு சொட்டாய்
கரைந்தாய்
அந்த நேரம்
நிலவும் ஒளி இழக்க
இருளும் கண் மறைக்க
அந்த நேரம்
அப்படியே உறைந்து போனோமடி
நீ எனக்குள் நான் உனக்குள்
அந்த நேரம்
காதலின் நேரம்......!!!