புருவங்கள் அசைத்து

புருவங்கள் அசைத்து,
என் புலமையை பறிக்கும்,
புதுமை புதுமை பூவே;
இரு இதழ்கள் இணைத்து,
புது விதி செய்யும்,
முத்தம் ஒரு நொடி சாவே.
என் கண்கள் சொல்லுதே
உன் காதலை.
என் நெஞ்சம் சொல்லுதே
உன் ஆவலை.
நீ தலையில் சூடிடும் பூக்காளால்;
நான் பூத்தேன் உந்தன் நெஞ்சிலே,
நீ நொடியில் பார்த்திடும் பார்வையில்;
நான் உறைந்தே போனேன் உன் கண்களில்,
என் இதயத்தில் துடித்திடும் பெண்ணுயிரே...