மலராத மொட்டுக்கள்
 
            	    
                வலியென்ற வார்த்தை தவிர 
வேறுசொல் தெரியவில்லை! 
அவன் செய்த அசிங்கம் விளக்கும் 
பக்குவமும் அடையவில்லை! 
அழைத்தவுடன் ஆசையோடு
ஓடிச்செல்லும் எண்ணம்தவிர,
தவறென்று நானேதும்
செய்யவில்லை!
ஆடையிலே சிக்கனத்தைக்
காட்டவில்லை! 
அர்த்தராவில் அங்குமிங்கும் 
சுற்றவில்லை!
பால்பல்லும் விழுகாத
பதின்வயது தேகத்தின்,
பாலுறுப்பு அடைகிறதே
ரணவேதனை!
மிருகம் கூட பருவம்
வந்த பின்னே
கூடல் தேடும்! 
பச்சைப் பிள்ளையிடம்
இச்சை தீர்த்துக்கொண்ட
எச்சை மானிடரே!
கண்ணாடி பார்த்துக்
காரி உமிழுங்கள்...
வளர்ந்து வாசம்
தரவேண்டிய தளிர்கள்...
மலரும் முன்னே
வாடிப் போயின!
காமத்தின் வஞ்சகத்தால்...
	    
                
