பிரியும் தருணம்
பிரியும் தருணம்..!
================
துன்பச் செய்தி கேட்டு, பழகிய நட்பு
நினைவுகளை நினைவு கூறும் விதமாக
எழுதிய நினைவுக் கவிதை
====================================
மனிதராய் வாழ மண்ணில் பிறந்து
மனிதரும் நட்பு மனமுடன் பிறந்தார்
அன்பு நண்பன் ஆருயின் நண்பனின்
அன்பைப் பற்றி உண்மையாய் எழுத
எண்ணம் பலவும் ஏக்கமாய்ச் சிதற
வண்ணக் கவிதை வரைய வந்தது
அன்பு நட்பென ஆயிரம் பேராகும்
அன்பில் அவன் அதிசயப் பிறவியே
ஒன்றாய்ப் படித்து ஒன்றாய் எங்கும்
குன்றாய் நின்றுக் குலவிய நாட்களில்
ஓடும் வெள்ளமாய் ஓடிய ஆயுளைச்
சடுதியில் குறைத்த சழக்கன் காலன்
பாலமாய் இருந்த பலமான நட்பைக்
காலனும் பிரித்துக் கவர்ந்தான் கடிதே
புரிந்து கொண்டுப் பழகிய உன்னைப்
பிரியும் தருணம் பக்கம் நானிலையே
=========================
நிலை மண்டில ஆசிரியப்பா
=========================
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
