தூது போகும் வண்ண மலரே---பாடல்---

பல்லவி :

தூது போகும் வண்ண மலரே
என் இதய சோகம் சொல்லும் மலரே... (2)

அடர்வனம் விழும் தீயாக
அங்க மெல்லாம் எரிகிறதே...
தொடர்மழை போல் நீ வந்தால்
நெஞ்ச மெல்லாம் குளிர்ந்திடுதே..

தென்றலிலே மணம் கமழ்ந்து
கள்வனிடம் நீயிதைச் சொல்லிவிடு
திங்களென தேய்கிறனே
என் காயத்திற்குப் புது மருந்திடு......

தூது......


சரணம் 1 :

மன்னன் முகம் காணாது
மங்கை மனம் வலி தாங்காது
சுடர் விடும் மெழுகு போல்
தினம் விழி தூங்காது...

நீ வரும் பாதையில்
என் உயிர் தவம் இருக்கும்
உன் விரல் தீண்டினால்
என் உடல் மலர்ந்திருக்கும்...

தனிமையில் தவிக்கிறேன் இதயம் நூறாய் வெடிக்கிறேன்... (2)
உயிர் காதலனை வரச் சொல்லு
என் காதலுக்கு உயிர் தரச் சொல்லு......

தூது......


சரணம் 2 :

வண்ண மலர் சூடாது
அன்னம் நீர் எதும் வேண்டாது
அனல் தொடும் சிறகு போல்
தழல் உயிர் தீண்டுது...

பூ விழும் மேனியில்
புண் தரும் ரணம் இருக்கும்
கண் இமை மூடினால்
உன் நிழல் சுகமளிக்கும்...

உளம் அது கிழிகிறேன் உதிரம் சாறாய்ப் பிழிகிறேன்... (2)
உயிர் காதலனை வரச் சொல்லு
என் காதலுக்கு உயிர் தரச் சொல்லு......

தூது......

எழுதியவர் : இதயம் விஜய் (21-Jul-18, 7:55 pm)
பார்வை : 732

மேலே