அதிசயம்
அதிசயம் அதிகம் இவ்வுலகில்
எறும்புகள் ஊர்ந்து வரிசையாக
செல்வது அதிசயம்
தேனீக்கள் பூக்கள் தேடி தேன்
சேமித்தல் அதிசயம்
சூரியகாந்தி சூரியனை
பார்த்து திரும்புவது அதிசயம்
மனிதனின் புன்னகை புரியும்
நொடிகள் அதிசயம்
அப்புறம் வகை நொடி பொழுத்தே
காணாமல் போவது அதிசயம்
பிறப்பு இறப்பு இவைகளின்
நடுவே எத்தனை எத்தனை அதிசயம்