கோபம் ஏனடி
கோபம் ஏனடி...
நாம் இருக்கும் தூரமே நமக்கு பிரிவை தந்தது...
மன இடைவெளியே காதலுக்கு எல்லை வகுத்தது...
மௌனம் தொடர்வதால் சிறு தவறுகளும் கிளைபரப்பி வளர முயல்கிறது...
பொறுமை மறுப்பதால் அவசர வார்த்தைகள் கோபத்தை உபயோகித்து கொள்கிறது...
வீண் பிடிவாதங்கள் வறட்சியான எண்ணங்களை ஊக்குவிக்கிறது...
நீ விலகும் நிமிடங்கள் எல்லாம் கண்ணீர் ஊற்றுகள் பொங்கி வழிகிறது...
உயிரே பிரியாதே; உணர்வுகளை கொள்ளாதே; மனம் தெளிந்து மணக்கோலம் கொள்வோம் வா...
கோபம் வேண்டாமே....