தனிமையில் அவள்
வசந்த கால தென்றல்
மலர்ச்சோலையின் பூக்களையெல்லாம்
தடவிவந்து என்னை தொட்டது
அது அறியுமா நான் இங்கு
தனிமையில் அவன் வரவை எண்ணி
நாட்களை எண்ணி வாடுகின்றேனே .. என்று,
அதோ அந்த மாமரத்தில்
பஞ்சவர்ண கிளிகள் ஜோடி
கொஞ்சி குலாவுகின்றனவே
கிளிமொழியில் காதல் பேசி,
அலகால் மென்மையாய்
கிளி முத்தம் இட்டு, ,இதோ
அது ஆண் கிளிதான் அறிவேன்,
தன் அலகில் ஏந்திவந்த
மாங்கனி துண்டை பெண்கிளியின்
வாயில் ஊட்டிவிடும் விதம்தான் என்ன.....
காதல் யாரை விட்டது.....
கிளிகளின் காதல் கூறுதே இதை ...
என்னவனே, இன்னும் நீ வாராததேனோ
புரியலையே , என்னை இப்படி
தனிமையில் வாடவிட்டு
நாளை வருவேன் கலங்காதே கண்ணு
என்று கூறிவிட்டு நீ போய்
மாதம் ஒன்று ஆகுதே ........அன்று நாம்
நதிக்கரையில் சந்தித்த இரவு
பௌர்ணமியே சாட்சி....... நீ போய்
இதோ நாளை பௌர்ணமி ,மீண்டும்
முழுநிலவு வந்துவிடும் ..........
வந்துவிடமாட்டாயா என்னோடு சேர,
நம் உறவிற்கு ஓர் ஏற்றம் தந்து
வாழ்வில் அர்த்தம் தந்திட இந்த
வசந்தத்திலேயே நீயும் நானும்
கணவன் மனைவியாய் புதுயுகம் காண,
இன்னும் என்னை கலங்கவிடாதே என்னவனே,
நீ வாராது, அன்றில் போல், வீழ்ந்திருக்கிறேன்
நானே இங்கு.....................
அதோ அந்த பஞ்சவர்ண கிளிகள்
ஒன்றாய் வானில் பறந்து போகுதே
என் நெஞ்சமோ இங்கு உன் நினைவில் வாடுதே
தனிமையில் ......................