அன்பு மனைவிக்கு
அன்பு மனைவிக்கு...
என் அம்மாவுக்கு அடுத்து பாசத்தால் திணறடிப்பவளே...
அன்பை திகட்ட திகட்ட தினமும் தருபவளே...
உன்னால் என் காதல் புத்தகம் நிரம்பி வழிகிறது...
பேசாத பேச்செல்லாம் உன்கிட்ட மூச்சிறைக்க பேசப்போறேன்...
நீ உதிர்க்கும் வார்த்தைகளை பத்திரப்படுத்தி வச்சிருக்கேன்...
வாழ்க்கையின் உயரங்களை உன்னை சுமந்துகிட்டே தொடப்போறேன்...
பொறாமைக்கு அலுப்புதட்ட உன்கூட மிகச்சிறப்பா வாழப்போறேன்...
உனக்கான துன்பங்களை எப்போதும் ஏற்றுக்கொள்ள நானிருக்கேன்...
உன் பயத்தையெல்லாம் விரட்டிவிட்டு பாதுகாக்க நானிருக்கேன்...
உன் கண்ணீருக்கு விடுப்பளித்து சந்தோசத்தை கொடுக்கப்போறேன்...
என்னை தேடிவந்த தேவதையை கொண்டாடித் தீர்க்கப்போறேன்...