ஹைக்கூ அல்ல, சில கருத்துக்கள்

வெளிச்சத்தில் மூடி உறங்கிய கண்கள்
இருட்டில் எதயோதேடின ,
கண்ணிருந்தும் குருடுதான்.

மழைக்கு விசிறியும் ,
வெயிலுக்கு போர்வையும் விற்றவன் ,
நொந்துகொண்டான்
அவனுக்கு நேரம் சரியில்லை என்று .

பெண்ணாய் பிறந்ததில்
மாந்தருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ ,
பசுமாட்டிற்கு மகிழ்ச்சி,
கசாப்புக்கடையில்
காளையை பார்த்தவுடன்.

வண்டி இழுத்தால் மாடுகள்
வலியில் சித்ரவதை படுமென்று
வண்டியின்மேல் பயணம் செய்தது
கருணைக்கொலைக்காக,
கசாப்பு கடைக்கு.

மாதவிலக்கான மங்கையை
ஒதுக்கி வைத்தார்கள்
கோவிலுக்குள் செல்லாமல் ,
தாய் கருவுற்றதால் பிறந்த
தீட்டுப்பட்டவர்கள் .

நீருயர்ந்தும் மூழ்காத
தாமரையும் ,
நீரிலிருந்தும் ஒட்டாத
தாமரை இலையும்,
பல ஆத்மாக்களுக்கு
நடுவில் ஒரு
மகாத்மா வளர்ந்தது போல் .

எழுதியவர் : (30-Jul-18, 3:51 pm)
சேர்த்தது : சகி
Tanglish : haikkoo
பார்வை : 64

மேலே