இல்லாமைக்கு ஈதல் சிறப்பு

மாபெரும் கடவுளர் கோவில்களில்
பொன்னும், வெள்ளியும் ,நவரத்தினங்களை
வந்து குவிகின்றன தினம் தினம்
எண்ணமுடியாத அளவுக்கு
ஆனால் நாட்டில் பட்டினியால் வாடும்
ஏழைகள் பலகோடி இருக்க
அவர்கள் வயிற்றில் காஞ்சி வார்க்க
மனமில்லையோ இவர்களுக்கு ,இப்படி
இறைவனுக்கு அவன்தந்த செல்வத்தையே
தந்து அவனை மகிழ்விக்க நினைக்கும் இம்மாந்தர்க்கு
அன்பெனும் சமுத்திரம் இறைவன்
ஏழைகளின் சிரிப்பில் மகிழ்ந்திடுவான்
உழைத்தும் உயராது தவிக்கும்
இவர்க்கு ஈதல் இறைவனுக்கு
செய்யும் பெருந்தொண்டு .........ஆக, இறைவன்
உண்டியலில் பொன்னையும் பொருளையும்
சேர்த்து வீணாக்கவேண்டாம்
அதைக்கொண்டு இல்லாதற்கு
வேண்டுவன செய்து அவர் வாழ்க்கையை
உயத்திடலாமே, அன்று குசேலனை
கண்ணன் உயர்த்தியதுபோல்.

எழுதியவர் : (31-Jul-18, 7:25 am)
பார்வை : 214

மேலே