மாறவேண்டும்

நாம் வாழ அரசியல் பேசி

உலகம்

தான் வாழ அரசியல் பேசுதடா...

அதிகார ஆசையில்

உலகம்

அரபோதையில் அலையுதடா....

கொண்ட கொள்கை மறந்து

உலகம்

கொடி கோட்டை ஏற ஏங்குதடா....

கொள்கை வைத்தது கோட்டை புடித்து

உலகம்

நோட்டை வைத்து ஆட்சி அமைக்குதடா...

சமத்துவம் பேசி வளர்ந்து

உலகம்

ஏற்ற தாழ்வில் வேகுதடா....

நல்ல தலைவன் இன்றி

உலகம்

தாறுமாறாக திரியுதடா...

திருத்த ஒருவன் திருந்த மக்கள்


உலகம் எப்போ மாறுமடா.....

எழுதியவர் : அரவிந்த் விஜய் (1-Aug-18, 11:33 am)
சேர்த்தது : அரவிந்த் விஜய்
Tanglish : maaravendum
பார்வை : 744

மேலே