முட்களோடு மலரும் ரோஜாக்கள் 555
பெண்ணே...
முட்களோடு ரோஜா
மலர்ந்தாலும்...
இதழ்கள் முட்களில் தொட்டால்
காயங்கள்தான்...
உன் இதழ்களால்
காதலை சொல்லி...
உன் உள்ளத்தால் என்னை
வெறுத்து சென்றாலும்...
என் உள்ளத்தின் காயங்கள்
மாறாத வடுக்கள்தான்...
உன் காதல் என்னும்
விளையாட்டிற்கு நான் கிடைத்தேன்...
பொய்யான உன் காதலோடு
வாழ்நாளெல்லாம் என்னை கொள்ளாமல்...
இன்றே விலகினையே
சந்தோஷம்தானடி எனக்கு உன்னால்.....