அலைகள் ஓய்வதில்லை கரையோர கவிதை
அலைகள் ஓய்வதில்லை
கடல் அலைகள்
இரவும் பகலும் ஓயாது
எழும் அலைகள்
கரையுடன் சேர்ந்திடும் போது
சங்கமத்தில் குளிர்ந்துவிடுகின்றதோ
சீற்றத்தில் எழும்பிவரும் அலைகள்
கரையை அணைக்கையிலே
அமிழ்ந்துவிடுவதேன் , குளிர்ந்துவிடுகின்றதோ
அணைப்பில் - எழுந்துவரும் அலைகள்
காதல் காதல் என்று ஓசையும்
ஓயாமல் ஓதுவதேனோ ஓயாமல்
சிலர் இதை நாடி ஓடுவதும்
இதனாலோ , தெரியாது இவர்களுக்கு
அலைகள் தேடுவது கரையை
கரை மணலை ......ஒன்றாய் இருந்திட
கரைகாணா காதலோ.....பாவம்
கடல் அலைகள் ஓய்வதில்லை