மலை உச்சி
மலை உச்சி !
பச்சை போர்வையின் உச்சியில்
இருந்து
வெள்ளி கோடுகள் போட்டு
தரையை தொட்டு செல்லும்
நீளமான கோடுகள் !
சிற் சில
இடங்களில் வளைந்தும்
நெளிந்தும் !
பஞ்சு பொதிகளாய்
உடலை உரசி
குளுமையை உணர்த்தி
தொட்டு செல்லும்
பனி மஞ்சுகள்
எங்கோ !
அவசர அவசரமாய்
ஆகாயத்தில் செல்லும்
வான் முகில்கள்
பார்க்கும் தொலைவில் !
அங்கங்கு சிறிய
மலை முகடுகள் !
முகடுகள் இடையில்
வளைந்தும் நெளிந்தும்
உச்சிக்கு செல்லும்
மனிதன் போட்ட
கரு நிற பாதைகள்
பாதைகளில் அங்கங்கு
ஊர்ந்து செல்லும்
சிறு பெரு ஊர்திகள்
தலைக்கனம் இல்லா
எவரும் !
உச்சியில் நின்று பார்த்தால்
தலை கனமாய் தோன்றும்
இந்த தருணங்கள் !
அழகே அழகே நீதான்
அழகே ! உன்னை விட
யார் அழகு ?