கடவுள் தேசம்

மும்மாரி மழைப்பொழிவு
முகப்பொலிவு கொண்டு
இயற்கை கொஞ்சிக்கிடக்கும்
மலை கீதம் மாணிக்கமாய்
மழலை மொழியும் இனிமை
ஆதவன் ஆருடம் செய்திடும்
அருவி அழகி அழகிட
உண்மையில்
கடவுள் தேசம்தான்

மழைவெள்ளம் வந்தும்
ரசித்த மக்கள்
வெள்ளமும் மகிழ்ந்தாள்...

வீழ்ந்துகிடக்கும் இயற்கை
சிலர் செயலால்
இடுக்கி அன்னை
இட்ட கட்டளை - மனித ஆசை
இஷ்டங்கள் எல்லாம்
இயற்கை தன்வசமாக்கியது..

இயற்கையன்னை
ஆழ்ந்து உரைக்கிறாள்
இது என்னுடையது என்று!
எங்களை மன்னித்துவிடு!
பிறப்பின் அருமை
புரியாதவர்கள் நாங்கள்!
உன்னை காக்க மறந்தோம்!

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (13-Aug-18, 3:31 pm)
Tanglish : kadavul dhesam
பார்வை : 213

மேலே