காதல் கனி

மலையுச்சி மரக்கிளையில்
முற்றிப் பழுத்து மணக்கும்
ருசியான கனியை
மிகவும் பிரயத்தனப்பட்டு
பறித்துப் புசிக்க
ஆவல் கொள்பவனாக
உன்னைச் சூழ சூழ நான்
ஓடோடி வருகிறேனே
நடந்து நடந்து என்
கால்களில் தான் வீக்கம்
என் முகம் காண ஏனோ
உனக்குச் சுணக்கம்.
எத்தனை நாளைக்குத் தான்
தருவாய் நீ எனக்கு ஏக்கம் ?

என் மனவெழுச்சி இன்னும்
புரியவில்லையா உனக்கு?
உன் உடலில் எனக்காக
பழுக்க வைத்த அந்த அழகிய
காதல் கனியை
என் மடியில் எப்போது தான்
விழ வைக்கப் போகிறாயோ !

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (15-Aug-18, 12:28 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kaadhal kani
பார்வை : 142

மேலே