பிரியமுள்ள காதலிக்கு
பிரியமுள்ள காதலிக்கு....
உன் அழகை வர்ணிக்க வார்த்தைகளைத் தேடி அலைகிறேன்...
உன் அருகாமையை உணர்கையில் அகிலம் ஆளத் துடிக்கிறேன்...
உன் நினைவுகளால் என் மனம் கவிதை மழை பொழிகிறது...
உன் இதழ் உதிர்க்கும் வார்த்தைகள் என் இதயத்தை மகிழ்விக்கிறது...
உன் பேரைப் பேசிப்பார்த்து மொழி அழகை அனுபவிக்கிறேன்...
உன் காதல் தரும் களிப்பு என்னை ஏதேதோ செய்கிறது...
என் வாழ்நாளெல்லாம் உன்னோடிருக்கும் வரம்வேண்டிக் காத்திருக்கிறேன்....