அனாதை
அனாதை
இரவின் இருட்டில்
அவசரமாக செய்த ஒப்பந்தத்தில்
கையெழுத்து சரிஇல்லையென்று
கசக்கிப்போட்ட காகித்ததுண்டு
ஒன்றோடு ஒன்று கூடினால்
இரண்டல்லவோ -இல்லை
இது புது கணக்கு
ஒன்றோடு ஒன்று கூடி
மீதம் வந்தது ஒன்று-அது
தெருவில் நின்றது இன்று
முற்றும் காமசுகம் முளைத்து
மற்றும் ஒரு ஜீவன் வந்தது
அது தானாய் பயணம் செய்தது
அம்மா உனக்கு அர்த்தம் தந்த
புள்ளியை தூக்கி எரிந்தாயோ
இன்றுமுதல் நீ அம்மா இல்லை
அமமா