என் முதல் சுவாசம் நீ

என்...
இனியவளே

என்னிருதயம்
துடிக்கின்ற துடிப்பே...!

என்னிரவுகள்
காண்கின்ற கனவே...

என்னிளமையின்
திப்பிழம்பே...

நானெழுதிய கவிதையின்
இலக்கணம்
நீயல்லவா....

ஒரே ஒருமுறை
உன்விழிகொண்டு
பாரடி...!

ஒரே ஒருமுறை
உன்னிதழ்கொண்டு
எனது பெயர் உச்சரி...

எமனுக்கு கண்ணிலே
இருப்பிடம் தந்தவளே...

ஏனெனக்கு
வார்த்தைகள் சொல்லாமல்
வடித்தாய் கல்லறை...

நீ நறுக்கிய
நகம்...

நீ விழுங்கிய
எச்சில்...

உன் கூந்தலில்
குடிகொண்ட பூ...

உன் மார்பில்
துயில் கொள்ளும்
மணி...

உன் நடைக்கு
இசைமீட்டும்
கொலுசு...

இமையில் நீயிட்ட
மை...

உன் விரல்பட்ட
மருதாணி...

உன்னிதழ்ப்பட்ட
வார்த்தைகள்...

உன் கூந்தல்
உதிர்க்கின்ற
முடி...!

இத்தனைக்கும்
சுர்க்கவாசல் பயணமாம்...!

உன்னை
உயிரென்ற எனக்கு
நரகவாசம்
தந்தாயே எதற்கு...?

சொல்லிவிடு பெண்ணே
என் சுவாசங்கள்
பிரியட்டும்...

என்னிருதயம்
உடையட்டும்

குருதியில் கொப்பளித்து
என்னுடல் ஏரிக்கட்டும்

அழுகின்ற கண்ணீரும்
வெந்நீராய் போகட்டும்...!

நானெழுதும் கவிதைகள்
என்னோடு மாளட்டும்

நீ...!
உண்மையைச் சொல்லிவிடு

இனி
துளித்துளியாய்
மரணிக்க முடியாதடி

அடைமழையாய்
அழுதே மரணிக்க
உண்மையைச் சொல்லிவிடு.

எழுதியவர் : முப்படை முருகன் (22-Aug-18, 9:38 am)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 354

மேலே