உன் ஞாபகம்
உன் ஞாபகம்...
கொட்டும் மழையில் மின்னின மழைத்துளி நீ...
பரந்த வானில் தனித்து தெரியும் விண்மீன் நீ...
பூந்தோட்ட மலர்களில் மனம் கவர்ந்த மலர் நீ...
ஆரவாரமற்ற இரவு நேரத்தில் தேகம் தீண்டிச் செல்லும் தென்றல் நீ...
ஆழமான அன்பால் இதயம் வடிக்கும் கண்ணீர்த்துளிகள் நீ...
திறக்க மறுத்த உதடுகளில் தடையின்றி பிறக்கும் புன்னகை நீ...
என்னை மறந்த நொடிகளில் உன்னை தேட வைக்கும் நினைவுகள் நீ...