இங்கிதம்
ஆரவாரமில்லா அழைப்பிற்கு
கடமை செய் நல்லுள்ளங்கள்
கூடியவார் எதிர்கொண்டது
படைப்பிலக்கிய ஆச்சரியம் !
தமிழ்ச் சொந்தங்கள் தொல்காப்பியத்தை செவிமடுத்து
புரிந்தும் தெரிந்தும் மௌனம் கண்டது
தொடர்கதை என்பதனை
வரவேற்புரை
அனிந்துரை
ஆய்வுரை
முடியுரை அம்பலப்படுத்தியது............
நன்றியுரை நாளிகையை கடத்திட
காப்பிக்கடை எடுத்துகொண்டது திறனாய்வு !
வாய் மொழி விவாதம் தடம்புரல
மாத்திரை முன் நின்றது .....
வினை எச்சம் வெகுண்டு நிற்க
வல்லினமும் இடையினமும் விடைபெற
மெல்லினம் சரிபார்த்து
இடையூர்தனை விளக்கியவார்
நினைவு கூர்ந்தது
இலக்கியம் வளர்க
இலக்கண இங்கிதம் தேவையென்று !