தந்தட்டி முக்கூத்தி

தந்தட்டி முக்கூத்தி
தட்ட வீடொன்னு
ஆளாக்குனே🍁
ஆடகு வெச்சி
வாழட்டும் தலைமுறை னு🍁
மூத்தவனோ கடைய வெச்சான்
இளையவனோ வேலை சேந்தான்
காசு பணம் சேந்த
பின்னே காதிரண்டும்
கேக்கலையோ🍁
இளைச்சி தேயிறேனே
இளையவனும்
காணலையே 🍁
மூச்சு போகையில மூத்தவனும் காணலையே🍁