அழகுக்கு அழகு

மலர்ந்து மலரா
மலரின் இதழ்போல
சற்றே சிறிது திறந்த
உந்தன் இதழ்கள் தரும்
அந்த புன்னகைக்கு
நிகரேதடி பெண்ணே
நீயணிந்த அணிகலன்கள்
அத்தனையில் அது
பொன்னாலான நகையோ
இல்லை மின்னும் வைர வைடூரிய
காதணியோ பதக்கங்களோ
முத்தோ பவளமோ இன்னும்
நகைகள் ஏதேனும் இருந்தாலும்
புன்னகையில் நீ காணும் அழகு
அழகுக்கே அழகடி பெண்ணே ,
புன்னகைக்கே மன்னனென்று
ஒருவன் இருந்தால் அவனை
வென்றிடுமே உன் புன்னகை
எந்தன் புன்னகை எழிலரசியே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Aug-18, 1:03 pm)
Tanglish : ALAGUKKU alagu
பார்வை : 216

மேலே