ஹைக்கூ - புத்தகம்

புத்தகத் திருடனாய் நானும்
எனைத் திருடிய புத்தகமாய் நீயும்..
இருவருமே சேர்ந்தே திருடுவோமா ?!

இணையம்
அலைபேசி
கேளிக்கைகள்
இவைகளெல்லாம் என் நேரத்தை
என்னை ஏமாற்றி திருடுகிறது ..

நீ மட்டும் ஏன்
திருட மறுக்கிறாய் ..

நிச்சயம் உன் திருட்டினால்
நான் இழக்கப்போவதில்லை...
இளைப்பாறத்தான் போகிறேன் ...

சீக்கிரமாய் திருட வா !
செல்லத்திருடா!!

எழுதியவர் : குணா (6-Sep-18, 10:21 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 631

மேலே