மகாத்மாவே மீண்டும் வா

மகாத்மாவே மீண்டும் வா !
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

தேச பிதாவே ! நீ
உண்ணாவிரதமிருந்து
உடல் வருத்தி கண்ணீர் விட்டு
வாங்கித் தந்த சுதந்திரம்
இன்னும் இந்திய மண்ணில்
மனிதநேயம் வேர்விடவில்லை!

அப்பாவி மக்களின்
அன்றாட வாழ்க்கையே
வன்முறை வெறியாட்டத்துடன்
குண்டு முழக்கத்தின் நடுவே
குருதியில் மிதக்கிறது !

துப்பாக்கிக் குண்டில்
தேச பிதாவே
நீ மட்டும் மடியவில்லை
மனிதநேயம் அன்பும்
மடிந்து கொண்டு வருகிறது !

அன்று
சுதந்திர இந்தியாவில்
பட்டாம் பூச்சிகள் போல்
சுதந்திரமாய்
பறக்கலாம் நினைத்தாய் !

இன்று
பறக்கும் பட்டாம் பூச்சிகளின்
சிறகுகளைப் பிய்த்து விட்டு
பறக்கச் சொல்லும்
சுதந்திர நாட்டில்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!

அன்று நீ
சுதந்திர இந்தியாவில்
அரசியலையே ஆன்மீகமாக்கி
வாழ நினைத்து வாழ்ந்தாய் !

இன்று
ஆன்மீகத்தையே முதலீடாக்கி
ஆன்மீகத்தையே அரசியலாக்கி
நாட்டையே
ஆள நினைக்கிறார்கள் !

வெளிச்சம் என்று நினைத்து
நாங்கள் தீயில் விழுந்து
வெந்து கொண்டு இருக்கிறோம் !

சுதந்திர ஆன்மீக வெளிச்சம்
எங்களுக்குக் கிடைப்பதற்கு
தேச பிதாவே,
எப்போது வருவாய் ?

தேச பிதாவே நீ
மீண்டும் வந்தால்
மனிதநேயம்
மீண்டும் துளிர்த்து விடும்
மகாத்மாவே தேச பிதாவே
மறக்காமல் மீண்டும் வா !



பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (11-Sep-18, 6:50 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 63

மேலே