கயல்விழியே காலடியில் சரணடைந்தேன்

கருவிழிகள் காதல் கணைகளைப் பொழிந்திட
வெண்முத்துப்படை நெஞ்சை மோக முற்றுகையிட
செம்முக மலர்த்தேரினில் போர் முழங்கி நீ வர
என் செந்தமிழ் வீரமெல்லாம் தோற்று நிற்குதடி
கயல்விழியே காலடியில் சரணடைந்தேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-18, 9:25 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 231

மேலே