பிரியாமல் நீ வர வேண்டும்

பிரியாமல் நீ வர(ம்) வேண்டும்....

உள்ளக் குமுறலை
உதட்டு வழி கொட்டி விடு
அழுத்தம் அதிகரிக்க
இதயம் வெடித்து விடும்...

சின்னதாய் போதுமே - உன்
புன்னகை
புரிந்து கொள்வேன்
என்னவளை...

என்னிடம் எதற்கு இந்த
வெட்கம் தயக்கம் எல்லாம்
நான் என்ன அந்நியனா
உன்னில் கலந்து
உறவென ஆனது இன்னுமேன்
புரியவில்லை...

போதும் கண்ணே
இந்த
விளையாட்டு
அலை கழிக்க நான் என்ன
மணல்திட்டா...

நம் நினைவுகளை
சுமந்து கொண்டு
நீயும் நானும்
நெருப்பினில் வேகும் வரை
மறந்தா போகும்
இடையிடையே...


சங்கடங்கள் சகஜம் தானே
வாழ்கயிலே
சந்திக்கும் முறையில் தானே
வாழ்வியலே

முள்கூட பிறந்த
பூ கூட சிரிக்குது
அழகழகா
என் கூட இருக்க
உன் மனம் ஏனோ
கசக்குது...

மறு ஜனனம் இருக்குமா
என தெரியவில்லை
இந்த ஜென்மமும்
நிலையுமில்லை
இருக்கும் வரை வாழ்ந்திடலாம்
வந்து விடு
என் ஜீவனுள்ளே என் ஜீவன்...

ஒரு நாள்
உனை பிரிந்த போது
உன் கண்ணில் நீர் சிந்த
என் உதிரம் கொதித்ததடி...

நீ
விடும்
மூச்சு காற்று
என்னுள்ளே பழங்கதைகள்
பேசுமடி...

உச்சரித்த உன்
உதடுகள் அறியுமா
உள்ளத்தின் பிரதிபலிப்பு...

வான் மேகம் என வாழ்ந்த
நம் காதல் பயணம்
மீண்டும் தொடர்ந்திட
நீ
எனை சேர்ந்திட வேண்டும்
வா வா கண்ணே...

எழுதியவர் : த பசுபதி (12-Sep-18, 11:36 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 607

மேலே