கர்ணன்

கன்னிக் கருவில் உதித்தவன்./
கதிரவனின் காந்த ஒளியால்
கருவானவன்./
கன்னம் வெடித்து வெளி
உலகைப் பார்த்தவன் /
கர்ணன் என்னும் பெயர் பெற்றவன்./குந்தி தேவிக்கு முந்தியமைந்தன்./
குளத்திலே நீந்தி வந்த மைந்தன்./
குதிரை ஓட்டியின் கண்ணில் பட்ட மைந்தன்/
குதுகலமாக பெட்டியின் உள்ளே
அமர்ந்த மைந்தன்./


துரியோதனுக்குப் பிள்ளையான கண்ணன்/
துரோகம் புரியும் அரசனுக்கு காவல் ஆனகண்ணன்./
துன்பத்திலும் சரி இன்பத்திலும் சரி
துணையாக நின்ற கண்ணன்./


அள்ளிக் கொடுக்கப் பிறந்த மகன்./
அன்பாக அரசன் எடுத்து வந்த மகன்./
அன்னையைக் கண்ட பின்னும்/
அங்கிருந்து நகராத நன்றி மறவாக்
கண்ணன் ./

சொட்டு இரத்தம் சொட்டும் போதும்./
சொர்க்க வாசல் திறக்கும் போதும்./
சொப்பமான இரத்தத்தை தன் மாமனுக்கு/
சொத்தாகக் கொடுத்த வள்ளல்./

ஆற்றிலே வந்து மழலையாக
அரங்கத்தை அழற வைத்த வீரன்./
ஆராத துயரத்தை தன் அன்னைக்கு/
கொடுத்து தான் கொடுத்த வாக்கை/
நிறைவேற்றி மறைந்த மாவீரன்./

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Sep-18, 7:22 pm)
Tanglish : karnan
பார்வை : 852

மேலே