என்ன வேண்டும்

இறைவன் என் முன் தோன்றி
என்ன வரம் வேண்டுமென்றால்
காணி நிலம் வேண்டும்
கட்டுக் கட்டாய் பணம் வேண்டும்
எட்டு பட்டி ஊருக்கும்
நாட்டாமையாக வேண்டும்
வற்றாத நதி ௐரம்
வண்ணமிகு மனை வேண்டும்
கொஞ்சி விளையாட
குமரி ஒன்று வேண்டும்
ஆணி பசும் பொன் வேண்டும்
அடுக்கடுக்காய் அமரிக்க டாலர் வேண்டும்
அய்ரோப்பிய ஈரோவை அள்ளித் தரவேண்டும்
விரும்பி வரும் வறைக்கும் என்
விதியை முடிக்காமல்
வான் முட்டும் செல்வம் தந்து
வகை வகையாய் இன்பம் தந்து
இன்னும் பல காலம் இருந்திட கேளேன்
இளைய தலைமுறைகள் இறுக்கும் வரைக்கும்
வருமையை அடையா வாழ்வினை தாயென
வந்து என் முன் நிற்கும் இறையிடம் கேட்பேன்