என்ன செயலாளர் ஆக்குங்க

வணக்கம் தலைவரே.

வாப்பா பொய்யாமொழி. உன்னோட வட்டாரத்தில நம்ம கட்சி வளர்ச்சி எப்படி இருக்குது?

அய்யா, நான் பொய்பேசறதல கின்னஸ் சாதனை படைச்சவன்னு உங்களுக்கே தெரியும். அதே போல மற்ற கட்சிக்காரங்களக் கேவலமாப் பேசிட்டு நான் அதைப் பேசவே இல்லைன்னு பொதுமேடையிலேயே கற்பூரத்தைக் கொளுத்தி சத்தியம் பண்ணுவேன். நான் பல குரல் பேரரசன்னு பட்டம் வாங்கினவன். அதனால என் பேச்சை அறிவியல் சோதனைக்கு அனுப்பினாக்கூட பேசியது நான் தான் நிரூபிக்கமுடியாதுங்க.

அதெல்லாம் சரி. நீ என்ன சொல்ல வர்ற?

என்ன நமது கட்சியின் செயலாளர் பொறுப்பை எனக்கு வழங்கினீங்களா, நான் மாவட்டம்தோறும் பல பேச்சாளர்களை உருவாக்குவேன். மக்கள் ஏமாளிகள். நமது பேச்சாளர்கள் நம்பும்படியான பொய்களைத் திரும்பத் திரும்ப் பேசி
மக்களை நம்ம பக்கம் இழுத்திருவாங்க. எல்லாத் தொகுதிகளிலயும் நம்ம கட்சிதான் செயிக்கும். ஒரு சில தொகுதில மட்டும் எதிர்கட்சிக்காரங்க செயிக்கிற மாதிரி தேர்தல் பணியாற்றுவோம்.

அய்யா பொய்யா, நீ பெரிய ஆளுய்யா. இப்பவே உன்ன மாநிலச் செயலாளர் ஆக்கறேன். நாம இருநூறு தொகுதில செயிச்சாப் போதும். உன்னுடைய பொய்மொழிக் குழு இந்தச் சாதனையைப் படச்சிட்டா உன்னை நம்ம கட்சியின் தென் பிராந்திய தேசியத் தலைவர் ஆக்க நான் சிபாரிசு பண்ணறேன். நம்ம மேலிடத்துக்கு அதிகமாப் பொய் பேசறவங்க, பொய் பேசிட்டு நான் அதைப் பேசவே இல்லை. யாரோ எங் குரல்ல பேசிருக்காங்கான்னு சொல்லறவங்களுக்குத் தான் நம்ம கட்சியின் மேலிடம் முக்கியத்துவம் தரும்.

ரொம்ப நன்றிங்க அய்யா. நான் வர்றேன்.

யோவ். வரவேற்பு அறையில நீ மாநிலச் செயலாளர் ஆனதுக்கான உத்தரவு இருக்கும் அதைக் கையோட வாங்கிடு போயிடு. நம்ம கட்சிப் பேச்சாளர்களுக்குப் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய். அவுங்களுக்கு திறமையாப் பச்சைப் பொய்யை எப்படி பேசி மக்களை நம்ப வைக்கறதுன்னு சொல்லித் தா. தேசிய அளவில பொய் பேசி பிரபலமா இருக்கறவங்கள அழச்சிட்டு வந்து சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற வைத்து நம்ம பேச்சாளர்களின் திறமையை வளர்த்திடு. சென்று வா பொய்யா.

சரீங்க அய்யா. தங்கள் எண்ணப்படியே எல்லாம் நடக்கும்.

எழுதியவர் : மலர் (17-Sep-18, 9:47 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 175

மேலே