உன் மீது எனக்கு காதல் தானடி!!!!!!!!!!

புத்தகத்தில்!
மயிலிறகு, நீ ரசிக்க!
உன் ஒற்றைக் கூந்தல், நான் ரசிக்க!
என் மனதில் மயிலும் நீதானடி!

பூந்தோட்டத்தில்!
பட்டாம்பூச்சி, நீ ரசிக்க!
உன் புள்ளி வைத்த பட்டுப்பாவாடை, நான் ரசிக்க!
என் மனதில் பட்டாம்பூச்சியும் நீதானடி!

பூங்காவனத்தில்!
பச்சைக்கிளி, நீ ரசிக்க!
உன் கிளி மூக்கில் ஒற்றைக் கல் மூக்குத்தி நான் ரசிக்க!
என் மனதில் பஞ்சவர்ண கிளியும் நீதானடி!

மாந்தோப்பில்!
கூவும் குயில், நீ ரசிக்க!
உன் குயில் பாட்டு நான் ரசிக்க!
என் மனதில் குயிலும் நீதானடி!

என்றும் உன் மீது எனக்கு காதல் தானடி!!!!!!!!!!

எழுதியவர் : நா. சந்தீப் (20-Aug-11, 5:20 pm)
சேர்த்தது : sandeep
பார்வை : 334

மேலே