என் வீட்டு சேவகன் (நாய்)
விடிகின்ற பொழுதுகளின்
விளக்கில்லா காவலனே
உனக்கோர் அஞ்சலியாக –இதோ
என் மௌன மொழிக் கோலம்.
படைப்பிலே தானடா நீ
ஐந்தறிவினன்
பார் போற்றும் ஆரறிவிற்கு
உன்னிடம் கற்கவோ ஆயிரம் ஆயிரம்...
தமையனை பெறும் முன்பே-என்
கைகள் உன்னை தழுவியதே
ஆஸ்த்திக்கு எத்தனை எத்தனையோ
ஆசைக்கு நீ மட்டுமே...
மானிட மொழிகள் கற்றேனே –உன்
மரபணு மொழி விளங்கலையே
வலிக்கின்ற பொழுதும் –உன்
வாஞ்சை மொழி வால் தானோ!
வேஷம் போடா அந்நியனே
கள்வன் எவனோ கல் ஏறிய
தவறிலையா உன் தலையில்
கல்லிற்கு புவிஈர்ப்பு விசை இருந்ததுவோ!
விழித்திரை தாண்டி விழி வடிந்ததோ
வலிதுடிக்க ஓடிவரக் கண்டேனடா-உன்
வலியறிந்தால் என் விழி கலங்குமென
வாலாட்டிக் கொண்டே மாய்ந்து விட்டாயோ
என் உயிர் சேவகனே!!!
ரா.அன்பரசு,
ஆங்கில ஆசிரியர்,
கோவை.